Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு: ஸ்டாலினை கலாய்த்த கஸ்தூரி


sivalingam| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (04:22 IST)
நேற்று தமிழக சட்டமன்றம் கூடியபோது  அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து சபையில் திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததோடு அமளியில் ஈடுபட்ட திமுகவினர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார். இதனால் வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  


 


பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சாலை மறியல் நடந்த அந்த சில நிமிடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் துயரம் அடைந்தனர்.

இந்த நிலையில் தனது டுவிட்டரில் பொங்கிய நடிகை கஸ்தூரி, 'ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம். எல்லாம் #பழக்கதோஷம். அடுத்தவாரிசுகள்' என்று கலாய்த்துள்ளார். கஸ்தூரியின் டுவீட்டுக்கு ஏராளமானோர் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :