வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 4 ஜனவரி 2017 (11:43 IST)

இனி மெரினாவில் சிவாஜி கணேசன் சிலை இருக்காது! - மே 18க்குள் இடம் மாறுகிறது

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, மே 18ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


 

முந்தைய திமுக அரசு மெரினா காமராஜர் சாலையில் - ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைத்தது. ஆனால், அந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து நடிகர் சிவாஜியின் சிலையை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அந்த சிலையை அரசு அதிகாரிகள் இன்னும் அகற்றவில்லை. இதையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த சிலை அகற்றப்பட்டு, மணி மண்டபம் அமைக்கப்படும் இடத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ‘சிவாஜி மணி மண்டபம் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும், சிவாஜியின் சிலையை காமராஜர் சாலையில் இருந்து அகற்றி, மணி மண்டபத்தில் நிறுவப்படும். வரும் மே 18ஆம் தேதிக்குள் சிவாஜி சிலை அகற்றப்படும்’ என்றார்.