Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆனந்தராஜை தொடர்ந்து அதிமுகவை விட்டு விலகும் ராதாரவி


bala| Last Updated: வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:20 IST)
நடிகர் ராதாரவி மீண்டும் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழ் திரையுலகில் முக்கிய இடம் நடிகர் ராதாரவிக்கு உண்டு. கதாநாயகன், வில்லன், காமெடி, குணச்சித்திர வேடங்களில் ஜொலித்துவருபவர். ஆரம்ப காலங்களில் திமுகவின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தார். பின்னர் அதிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அப்போது எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு அதிமுகவிலிர்ந்துன் விலகி மீண்டும் திமுகவிற்கு செல்ல முயன்றார். அதற்காக கருணாநிதியை சந்தித்தார். ஆனால் யாரும் எதிர்ப்பாராவிதமாக மீண்டும் அதிமுகவிலேயே தொடர்ந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவிலிருந்து விலகியே காணப்பட்டார்.

இ ந் நிலையில் நடிகரும் வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட ராதாரவி பேசியபோது, அரசியல் குறித்த எனது முடிவை விரைவில் அறிவிப்பேன். திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணம் அடைவார். அவரை நேரில் சந்தித்து எனது முடிவை அறிவிப்பேன். ஸ்டாலினுக்கு முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது என்று கூறினார்.

 


இதில் மேலும் படிக்கவும் :