பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பரணி - எதற்கு தெரியுமா?


Murugan| Last Updated: ஞாயிறு, 16 ஜூலை 2017 (16:03 IST)
இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பரணி கலந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணி அங்கிருந்த இதர 14 பேர்கள் யாரிடம் ஒட்ட முடியாமல் தவித்துவந்தார். அதன் பின் ஒரு சூழ்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு அவரை அடிக்கப் பாய்ந்தார். மேலும், காயத்ரி ரகுராம் உட்பட யாருக்கும் பரணியை பிடிக்கவில்லை. எனவே, இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது என கருதிய பரணி, சுவற்றின் மீது ஏறி அங்கிருந்து வெளியேற முயன்றார். எனவே, அவரை நிகழ்ச்சி குழுவினர் நீக்கி விட்டனர்.
 
ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் அவருக்கு பெரிய ஆதரவு இருக்கிறது. அவர் ஒரு அப்பாவி , நல்லவர் திட்டம் இட்டு அவரை கார்னர் செய்து வெளியேற்றிவிட்டனர் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார். மேலும், அவரிடம் கமல்ஹாசன் உரையாடுகிறார். பிக்பாஸில் அவரின் அனுபவம், அவருக்கு மற்றவர்கள் எது போன்ற தொல்லைகளை கொடுத்தனர் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் கூறுவார் எனத் தெரிகிறது. 
 
எனவே, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :