1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 24 ஏப்ரல் 2014 (13:29 IST)

கட்சித் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் ஆர்வமுடன் வாக்களிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை அளித்தனர்.
 
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார், அவருடன் தோழி சசிகலாவும் வந்தார்.
 
திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
 
கோபால புரத்தில் உள்ள சாரதா பள்ளியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, அமிர்தம், செல்வம், செல்வி, அவரது மகள் எழிலரசி ஆகியோரும்  வந்து அதே வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.
 
முன்னாள் மத்திய மந்திரி தயாநிதியும் ஓட்டளித்தார்
 
கனிமொழி எம்.பி. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. புனித எப்.ஆர்.எஸ். பெண்கள் பள்ளியில் காலை 8.30 மணிக்கு ஓட்டு போட்டார்.
காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் சிட்டாள்ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளியில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது மனைவி நளினி சிதம்பரத்துடன் வந்து வாக்களித்தார். அதுபோல காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தனது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி யுடன் வந்து வாக்களித்தார்.
 
ரஜினி இன்று கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக் கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு ஓட்டு போட வந் தார். காலை 7.15 மணிக்கு அவர் தனது ஓட்டை பதிவு செய்தார்.
 
நடிகர் கமலஹாசன் காலை 8 மணிக்கு ஆழ்வார்«பட்டை திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். அவருடன் நடிகை கவுதமியும் வந்து இருந்தார். இருவரும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டனர்.
நடிகர் அஜீத் மனைவி ஷாலினியுடன், திருவான் மியூர் குப்பத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகை குஷ்பு சாந்தோமில் உள்ள பள்ளியில் காலை 8 மணிக்கு ஓட்டு போட்டார்.
 
நடிகர் விஜய், அடையாறு வாக்குச்சாவடியில் தனது வாக்கைப்பதிவு செய்தார். 
 
நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தியாகராயநகர் இந்தி பிரசாரசப£வில் உள்ள வாக்குச்சாவடியில் பகல் 12 மணிக்கு ஓட்டு போட்டனர்.
 
சூர்யா, அஞ்சான் படப் பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டு இருந்தார். இன்று படப் பிடிப்பை ரத்து செய்து விட்டு காலை விமானத்தில் ஓட்டுப் போடுவதற்காக சென்னை வந்தார். சூர்யாவுடன் நடிகர் சிவகுமாரும் வாக்களித்தார்.