வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:38 IST)

ஜல்லிக்கட்டு போராட்டம்: களமிறங்கப்போகும் நடிகர் அஜித்!

ஜல்லிக்கட்டு போராட்டம்: களமிறங்கப்போகும் நடிகர் அஜித்!

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் போராட்டத்துக்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது. நடிகர்கள், இயக்குனர்களும் போராட்டத்தில் இளைஞர்களுடன் இணைந்துள்ளனர்.


 
 
இந்நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்காக ஒரு நாள் மௌன போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் கலந்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளையும் அறிவுறுத்துவோம் என தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.
 
இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்த இருக்கும் போராட்டத்தில் நடிகர் அஜித் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் அஜித் உறுதியாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.
 
நடிகர் சங்க தேர்தல் மற்றும் பொதுக்குழு போன்றவற்றில் கலந்துகொள்ளாத நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு போராட்டத்தை இளைஞர்கள் நடத்துவதால் இதில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 
கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு செல்லாத நடிகர் அஜித் இதற்கு முன்னர் இலங்கை பிரச்சினையின் போது நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.