தீபா பேரவையில் இணைந்த 32,000 பேர் - என்னாச்சு தூத்துக்குடிக்கு?


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 30 ஜனவரி 2017 (18:29 IST)
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர், தாங்கள் ஜெ. தீபா பேரவையில் இணைவதுடன், அப்பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்களை பலரையும் தீபா பேரவையில் இணைத்து வருகின்றனர்.

 

பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இனைப்பு விழாவில் அதிமுக இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் தங்களை ஜெ. தீபா பேரவையில் இணைத்துக் கொண்டனர். மேலும், அண்ணா நகர், தாமோதர் நகர், பகுதிகளை சேர்ந்த தொண்டர்களும் இணைந்தனர்.

இவ்வாறு இதுவரை இணைந்தவர்கள் 35,000 பேர் இருக்கலாம் என அவர்கள் சொல்கிற தகவல்கள் உறுதி செய்கின்றன. இதேபோல், மேலும் சிலர் ஜெ. தீபா பேரவையில் இணைவார்கள் என்று தெரிகிறது.

தொடர்ந்து இதேபோல் ஒவ்வொரு மாவடத்திலும் உள்ள அதிமுக தொண்டர்கள் தீபா பேரவையில் இணைந்து வருவதால் அதிமுகவின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக அதிமுக கழக விசுவாசிகள் சிலர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :