1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2015 (05:58 IST)

அப்துல் கலாம் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.
 

 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாதவது
 
இந்த நாட்டில், மாணவர்களைக் கொண்டு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை கொடுத்தவர் டாக்டர் அப்துல் கலாம். அவர், மிகமிக உயர்ந்த பதவி வகித்த போதும், தான் ஒரு ஆசிரியராகவே அறியப்பட வேண்டும் என்று விரும்பி வாழ்ந்தவர்.
 
தான் வாழும் அனைத்து நாட்களிலும், மாணவர்களோடு கலந்துரையாடி, அவர்களுக்கு எதிர்காலம் மீது நம்பிக்கை கொடுக்கும் வகையில் அறிவுப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தவர்.
 
அப்படிப்பட்ட அப்துல் கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட அரசு முன்வரவேண்டும். மேலும், அப்துல் கலாம் பிறந்த நாளை, தேமுதிக சார்பில் மாணவர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.
 
எனவே, அக்டோபர் 15ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அவர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாமின் புத்தகங்கள் மற்றும் நினைவை போற்றும் வகையில் பரிசுகள் வழங்கப்படும் என்றார்.