வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2020 (21:27 IST)

ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இலவச அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி...எம். ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

கரூரில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இலவச அத்தியாவசிய தேவை பொருட்களான மளிகை பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியினை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு நிவாரண பொருட்கள் கரூர் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட பணியாக ஒரு லட்சம் குடும்பங்களுக்கு அரிசி கோதுமை மாவு, பருப்பு எண்ணெய் சர்க்கரை மஞ்சள் தூள் மற்றும் உப்பு போன்ற மேற்கொண்ட பொருட்களை இல்லங்கள் தோறும் கரூர் மாவட்ட அதிமுக சார்பாக விலையில்லாமல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியினை வெங்கமேடு எம்.ஜி.ஆர் சிலை அருகே துவங்கி வைத்தார் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் துவங்கி வைத்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் நகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்., அப்போது., கரூர்  மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில்  தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அதைப்பற்றி விமர்சித்து வருகிறார் என்றும், ஆனால் அரசு மருத்துவமனை என்பதும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இருக்கிறது என்றும் அவர் கூறி வருகின்றார்.  ஏற்கனவே இருக்கக்கூடிய நகர மையப்பகுதியில் அரசு மருத்துவமனை அந்த மருத்துவமனையில் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது அவருக்குத் தெரியாமல் புரியாமல்  கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு விடுத்து வருகின்றார் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டினார்.  மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 127 பேர் அனுமதிக்கப்பட்டவர்கள் அதில் வைரஸ் தொற்று உள்ளவர்களாக 112 நபர்கள் என்றும், இதில் கரூரை சார்ந்தவர்கள் 26 பேர் திண்டுக்கல்லைச் சார்ந்தவர்கள் 43 பேர் நாமக்கல்லைச் சார்ந்தவர்கள் 43 பேர் தொற்றுநோய் அல்லாதவர்கள் என்று 15 நபர்கள் என்றும், கரூரில் 12 நபர்கள், திண்டுக்கல் பகுதியில் ஒருவர், நாமக்கல் பகுதியினை சார்ந்தவர்கள் இரண்டு பேர் இதில் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் 53 பேர் கருவூரை சார்ந்தவர்கள் 20 பேர், திண்டுக்கல் 6 பேர், நாமக்கல் 27 பேர் தொற்றுநோய் அல்லாமல் சந்தேகத்தின் பெயர் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு நெகட்டிவ் வந்தவுடன் அவர்களை வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள் கரூரைச் சார்ந்தவர்கள் மட்டும் 27 பேர் என்றார்.  
144 தடை உத்தரவை மீறி சென்ற நபர்கள் மீது காவல்துறையினர் இதுவரை 3825 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4445 நபர்கள் கைது செய்யப்பட்டு 2905 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர் மேலும் போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிபி கிட்டு 100 நபர்களுக்கும் மருத்துவர்களுக்கு பிபி கட்டு  100 களும் 5,000 மாஸ்க்குகளும், 555 ஹேண்ட்வாஷ்களும் , 5,000 வாட்டர் பாட்டில்களும் அதுமட்டுமில்லாமல் 
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உடைகள் 4849 இதுவரை வழங்கப்பட்டுள்ளது எண்95 முககவசம் 4670 மூன்றடுக்கு மாஸ்க் 62,230 கையுறைகள் கிளவுஸ் 6,300 கிருமிநாசினி 30 ஆயிரத்து 705 லிட்டர் கைகழுவும் தினம் 1349 லிட்டர் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இதனை தெரிவித்தார்.

பேட்டி : எம்.ஆர்.விஜயபாஸ்கர் – தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்