எக்ஸ்ட்ரா கொய்யா கேட்ட வாலிபர்: ஓட ஓட வெட்டிய பார் ஊழியர்

tasmac
Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (12:20 IST)
பாரில் கொய்யா பழ பிரச்சனைக்காக வாலிபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் மது அருந்த தனது நண்பருடன் அப்பகுதியில் இருக்கும் பாருக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பார் ஊழியரிடம் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தார்.
 
அப்போது பார் ஊழியர் கொய்யா பழத்தை கொடுத்துள்ளார். சிவா தமக்கு இது பத்தாதும், இன்னும் நிறைய எடுத்து வா என கூறியுள்ளார். இதனால் அந்த ஊழியருக்கும் சிவாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
அந்த பார் ஊழியர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைக்க கத்தி, அரிவாளுடன் வந்த அவர்கள் சிவாவை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த கொடூர செயலை செய்த அந்த பார் ஊழியரையும் அவனது நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :