செருப்ப காணோம்: புகார் கொடுத்த நபர்; சல்லடை போட்டு தேடும் போலீஸ்: சென்னையில் கலகல

slipper
Last Modified திங்கள், 26 நவம்பர் 2018 (09:12 IST)
சென்னை தண்டையார் பேட்டையில் செருப்பை காணவில்லை என்று நபர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அவரது செருப்பை தேடி வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவர் பேரிஸ் கார்னரில் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் கடை வைத்துள்ளார். 
 
இந்நிலையில் நீரிழிவு செக்கப்பிற்காக இவர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். செக்கப் முடிந்த பின்னர் வெளியே வந்து பார்த்த போது தனது செருப்பு திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
உடனடியாக தண்யார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அவர், 2 நாட்களுக்கு முன்னர் தான் 700 ரூபாய் கொடுத்து புது செருப்பை வாங்கினேன். அதை யாரோ திருடி சென்றுவிட்டனர் என்று கம்ப்லெயிண்ட் எழுதி கொடுத்தார். புகாரை வாங்கிய போலீஸார் காணாமல் போன செருப்பை தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :