புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையை குறிவைத்து களமிறங்கியிருக்கும் போதை மாத்திரை கும்பல்

drug
Last Modified செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:54 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள்களை சப்ளை செய்ய திட்டமிருந்த நைஜீரிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெரு நகரங்களில் இளைஞர்கள் பலர் போதை பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட இளைஞர்களை குறிவைத்து போதை பொருள் சப்ளை செய்யும் கும்பல் நன்கு சம்பாதித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை குறிவைத்து சென்னையில் போதை மாத்திரைகளை சப்ளை செய்ய திட்டமிருந்த நைஜீரிய நாட்டு வாலிபரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து 518 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ச்சியாக அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :