1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (19:05 IST)

வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.கடலில் சுமார் 45 முதல் 55கி,மீ வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதால்   மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.