வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2017 (17:22 IST)

அதிமுக எம்.எல்.ஏக்களே...உங்களுக்கு ஒரு வாய்ப்பு...

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும் அதிமுக மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது நாட்டையே உலுக்கியது. 


 

 
இதனையடுத்து சசிகலா மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தின் பின்னால் ஒன்று சேர்ந்து நிற்பது போல ஒரு சூழல் உருவாகியுள்ளது. 
 
ஆனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் 134 பேரின் ஆதரவும் தங்களுக்கே இருப்பதாக சசிகலா தரப்பு கூறியுள்ளது. இதுவரை ஒரிரு அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே, ஓ.பி.எஸ் பக்கம் சென்றுள்ளதாக தெரிகிறது. இன்னும் சிலர் வருவார்களா.. மாட்டார்களா என்பது தெரியாமல் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
மேலும், இன்று காலை நடந்து முடிந்த எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பின்பு அவர்கள், பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்லது. நாளை அவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படலாம் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஒரு சாமானியனின் கடிதம் என்ற பெயரில் ஒரு வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அனைத்து அதிமுக எம் எல் ஏ க்களுக்கும் ஒரு சாமானியனின் கடிதம்!
 
அதிமுக எம் எல் ஏக்கள் அனைவருக்கும் 
 
வணக்கம்,
 
தாங்கள் தங்களது சுயமரியாதையை இழக்காமல் நீங்கள் உங்களது கடமையை ஆற்றிடவும், மக்கள் நலனுக்காக உழைக்கவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் காத்திருக்கிறது..
 
தவறான முடிவால் தொகுதி மக்களை ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகாமல் உங்களது நேர்மையை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு..
 
இப்படிப்பட்ட நல்வாய்ப்பை பயன்படுத்தி உங்களது நற்செயலையும் நேர்மையையும் மக்களுக்கு நிரூபணம் செய்யப் போகிறீர்களா? அல்லது சசிகலா நடராஜனை முதல்வராக அமரச்செய்து மீண்டும் அடிமையாக இருந்து செயல்பட போகிறீர்களா ?
 
மக்கள் அனைவரும் சசிகலா குடும்பத்தின் மீது உச்ச வெறுப்பில் இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு உங்களது வருங்காலம்.  ஆகவே நீங்கள் உடனடியாக உங்கள் உங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்கவும். அவர்களின் கருத்துக்களை கேட்டு உங்களது முடிவை எடுப்பது நல்லது என்பதையும் தங்களது கணவனத்தில் கொண்டு செயல்படவும். இல்லையேல் உங்கள் தொகுதிக்குள் நீங்கள் எப்பொழுது நுழைய முடியாமல் மக்களால் விரட்டப்படலாம். சிந்தியுங்கள்.
 
அன்புடன்,
 
இந்தியன் குரல்...
 
என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.