1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (16:11 IST)

சென்னை மெரினா உள்ளிட்ட 8 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா மையமாகிறது

தமிழகத்தில் சென்னை மெரினா உள்ளிட்ட 8 கலங்கரை விளக்கங்களை சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
 

 
இதுகுறித்து மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் துறை இயக்குநர் (பொறுப்பு) டி.வெங்கட்ராமன் கூறுகையில், ”கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதிகளை சுற்றி சுற்றுலா தொடர்பான பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 
இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகளில் 78 கலங்கரை விளக்கங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
 
தமிழகத்தில் உள்ள மெரினா, மணப்பாடு, கீழக்கரை, கோடியக்கரை, பரங்கிப்பேட்டை, பழவேற்காடு, மகாபலிபுரம் மற்றும் முட்டம் ஆகிய இடங்களில் உள்ள 8 கலங்கரை விளக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 
இந்த கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா மையங்களாக மாற்றப்பட உள்ளன. இந்த கலங்கரை விளக்கங்களை சுற்றி ‘பொது தனியார் பங்களிப்பு’ (பி.பி.பி.) திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கங்களை பார்வையிடும் கேலரிகள், ரிசார்ட்கள் மற்றும் ஓட்டல்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.