8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞர் கைது

Webdunia|
FILE
சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கன்னி பகுதியை சேர்ந்த 3ஆம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமி தனியாக வீட்டில் இருந்த சமயத்தில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் திருமணமான வாலிபரான பொய்யாழி(வயது26) என்பவர் திடீரென சிறுமி வீட்டுக்குள் புகுந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் சிறுமி கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பொய்யாழியை கைது செய்தனர். பொய்யாழிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணமாகி உள்ளது. தலைப்பிரசவத்திற்காக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :