வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (21:36 IST)

தமிழகத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 
பாராளுமன்ற தேர்தல் இன்று 6-வது கட்டமாக தமிழ் நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள்   மற்றும் யூனியன்  பிரதேசங்களில் நடந்து முடிந்துள்ளது.  மொத்தம் 117 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
 
இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக காலை 6.45 மணி முதலே மக்கள் வாக்கு சாவடிகளுக்கு வர தொடங்கி விட்டார்கள்.
 
7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும்  பெரும்பாலான  ஓட்டு சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டளித்தனர்.
 
தமிழகம் முழுவதும் 9 மணி நிலவரப்படி 14.31 சதவீத வாக்குபதிவும்  11 மணி நிலவரப்படி 35.28 சதவீத வாக்குப்பதிவும் நடநது இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
 
இந்நிலையில், மாலை 6 மணியுடன் நடந்து முடிந்த தமிழக அளவிலான வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
 
இதேபோன்று, சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு 62 % வாக்குகள் பதிவாகியுள்ளன.