செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (12:01 IST)

ஜெயலலிதா மறைந்த அதிர்ச்சியை தாளாமல் 60க்கும் மேற்பட்டோர் மரணம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு, அதிர்ச்சி தாளாமல் 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.


 

இவர் நேற்று முன்தினம் [திங்கட்கிழமை] இரவு 11.30 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த செய்தியை பொதுமக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்ததும், செய்தியை கேட்ட அதிர்ச்சியால் 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய பகுதியிலும் தேனி மாவட்டம் போடி பகுதியிலும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியிலும், திண்டுக்கல் மாவட்டம்: வத்தலக்குண்டு பகுதியிலும், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், பொன்னேரி பகுதியிலும் பலரும் அதிர்ச்சியில் இறந்துள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி குன்னத்தூரை சேர்ந்த சுரேஷ் (24) நேற்று காலை ஜெயலலிதா இறந்த செய்தியை பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், வெம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இறந்தனர்.

வேலூர் மாவட்டம் வல்லம், நாச்சியார்வட்டம், கடலூர் மாவட்டம் சோழத்தரம் பகுதியிலும், விழுப்புரம் அருகே உள்ள வெங்கந்தூர், திருவெண்ணெய்நல்லூர் காரப்பட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன், திட்டக்குடி திருவட்டத்துறை பகுதியை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியில் இறந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுயிலும், கறம்பக்குடி அருகே உள்ள மேலபொன்னன் விடுதி மற்றும் கணக்கண்காடு ஆகிய பகுதியிலும், நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில்லும் முதலமைச்சர் இறந்த செய்தியைக் கேட்ட துக்கத்தில் இறந்தனர்.

அதேபோல், பெரம்பலூர் திருப்பெயர் மற்றும் சங்குபேட்டை பகுதியிலும், சேலத்தை தாரமங்கலம், அமானி கொண்டலாம்பட்டி, கன்னங்குறிச்சியை காடையாம்பட்டி, தேவூர், மற்றும் காவேரிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் மரணமடைந்துள்ளனர்.

திருச்சி திருவெறும்பூர், கரூர் மாவட்டம், கோட்டக்கரை, பெரியபனையூர், குளித்தலை மேட்டுமருதூர் பகுதிகளுலும், ஜெயலலிதா மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், ஊட்டமலையை சேர்ந்த முருகேசன் (55) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மேலும், தர்ம்பரி, சிவகாசி, பரமத்தி வேலூர் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் ஜெயலலிதா இறந்த சோகத்திலும், அதிர்ச்சியிலும் மரணமடைந்துள்ளனர்.