வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:15 IST)

நீலகிரி கனமழை சேதம் – முகாம்களில் 5000 பேர் !

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை கனமழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்பு படை, ராணுவம், தீயணைப்புத் துறை, காவல் துறை, வனத் துறை என மீட்புப் பணிக்குழுக்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் இந்தப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதால் மீட்புப் பணிகளில் இன்னும் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மழையால் இதுவரை 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் இருந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.