1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (13:07 IST)

திருவண்ணாமலை கோயில் குளத்தில் மூழ்கி குருக்கள் உள்ளிட்ட 4 பேர் பலி

திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நீராடியபோது தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர்.


 

இன்று தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் கோவில்களில் குவிந்துவருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.

பக்தர்கள் பலர் குளத்தின் கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து கொண்டு இருந்தனர். குளத்தின் இன்னொரு பகுதியில் சாமி சிலைகளை கொண்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் பொதுமக்கள் குளத்தில் விழுந்தனர். தீர்த்தவாரி நடத்திய குருக்கள் மீதும் பக்தர்கள் விழுந்தனர். இதனால் குருக்கள் உள்பட பலர் குளத்தில் மூழ்கினர்.

இதில் குருக்கள் புண்ணியகோட்டி(50) நீரில் மூழ்கி இறந்தார். மேலும் 3 பேர்கள் உடல்கள் மீட்கப்பட்டன. தகவலறிந்த திருவண்ணாமலை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நீரில் மேலும் சிலர் மூழ்கியிருக்கலாம் என ஏற்பட்ட அச்சத்தை அடுத்து போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.