வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (15:37 IST)

3ஆவது அணிக்காக தேமுதிக, தமாகவுடன் பேச்சுவார்த்தை - ஜி.ராமகிருஷ்ணன்

சட்டமன்ற தேர்தலில் 3ஆவது உருவாகும் என்றும், தேமுதிக, தமாகாவை சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் சிபிஐ(எம்) மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
இது குறித்து ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், “வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகரித்து தனியார் மயமாக்குவதை கண்டித்து கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற பொது வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
 
மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வாபஸ் பெற்றதும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 
 
தமிழகத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் உள்பட 5 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.
 
சட்டமன்ற தேர்தலில் இந்த இயக்கம் 3ஆவது அணியாக மாறும். தேமுதிக, தமாகாவை சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம். தற்போது தமிழகத்தில் நடந்து வரும் தவறுகளுக்கு திமுக - அதிமுகதான் காரணம்” என்றார்.