வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (13:29 IST)

இல்லற வாழ்க்கைக்காக 2 வாரங்கள் பரோல்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்து ஆயுள் தண்டனை கைதி ஒருவருக்கு இல்லற வாழ்கை நடத்த 2 வாரங்கள் பரோல் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து குற்றவாளிகளுக்கும் இல்லற வாழ்கையை தொடர உரிமை உண்டு என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சமிபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, இரண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநெல்வேலையை சேர்ந்த பெருமாள் என்ற கைதிக்கு  இல்லற வாழ்கை நடத்த 2 வாரங்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக தனது கணவருக்கு இரண்டு வாரங்கள் பரோல் வழங்க வேண்டும் என பெருமாளின் மனைவி முத்துமாரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த  நீதிபதிகள், ஆயுள் தண்டனை கைதியான பெருமாளுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பரோல் வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து சிறை அதிகாரிகள் இன்று பெருமாளை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.