ஒகேனக்கல் அருகே பரிசல் படகு கவிழந்து விபத்து - 2 பேர் பலி


Ashok| Last Modified ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (19:48 IST)
தர்மபுரி மாவட்டம் மணல்மேடு பகுதியில் பரிசல் படகு கவிழ்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
 
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றின் அருகே மணல்மேடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பரிசல் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 9 பேரில் 2 பேரின் உடலை தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
 
மீதமுள்ள 7 பேரின் உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து திடீரென மணல்மேடு பகுதியில் ஆற்றின் வேகம் அதிகரித்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக  அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சென்னை தியாகராய நகரை சேர்ந்த 9 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் பரிசலில் பயணம் செய்யும் பொழுது தற்காப்பு உடுப்பை பயண்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த உறவினர்கள் ஒகேனக்கலுக்கு சென்றுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :