வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (16:30 IST)

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு : ஏடிஜிபி உட்பட ஏராளமானோர் சிக்க வாய்ப்பு

17 வயது சிறுமியை தந்தை சகோதரன் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


 
சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). இவருக்கு கார்த்திக் (23) என்ற மகனும் 17 வயது மகளும் உள்ளனர். முத்துப்பாண்டியும், மகன் கார்த்திக்கும் 17 வயது சிறுமியை தொடர்ந்து பலநாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
 
இதுதவிர பல ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து தந்தை, அண்ணன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்டக்டர், அண்ணன் கார்த்திக் அவருடைய நண்பர்கள் என பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 
இதனால் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால், அந்த கர்பத்தை கலைக்க மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு இருந்த மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 
இதுகுறித்து புகார் தெரிவிக்கச் சென்றபோது காவல்துறை உதவி ஆய்வாளர், காவல்துறை ஆய்வாளர், ஏ.டி.ஜி.பி. ஆகியோரும் தன்னை பாலியல் கொடுமைப்படுத்தியதாக விசாரணைக் குழுவிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
 
மேலும், மதுரையில் ஐ.ஜி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஒருவரும் பலமுறை அந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். பின்னர் அப்போது ஐ.ஜி.யாக இருந்தவருக்கும் சிறுமியை அறிமுகம் செய்துள்ளனர். அவரும் சிறுமியை பலமுறை சீரழித்துள்ளார்.

இந்த விவகாரம் பற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் மகளிர் காவல் துறையினரும், குழந்தைகள் நலக் குழுவினரும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
 
இது தொடர்பான வழக்கில் அந்த சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. பின்பு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சிறுமி சென்னையில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
இந்த விசாரணையில் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில் கூறிய நபர்கள் குறித்து விவரங்களை அவர்கள் சிறுமியிடம் கேட்டு அறிந்தனர். இந்த சம்பவத்தில் சிறுமி ரகசிய வாக்குமூலத்தில் கூறிய 27 பேர்கள் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் அவர்கள் கேட்டறிந்தனர். 
 
இந்த விவகாரத்தில் இதுவரை சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்திக் ஆகியோரையும் சேர்த்து 8 பேர் கைதாகி உள்ளனர்.