16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல்

Rape
Suresh| Last Updated: திங்கள், 21 செப்டம்பர் 2015 (10:08 IST)
புதுச்சேரியில் இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துயினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
டிஎன்.பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோர் இறந்து விட்டதால், தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அருகே இருந்த சிமெண்ட் கடையில் பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்பவருக்கும், அவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதற்கிடையே அந்த சிறுமியிடம் திருமண ஆசை காட்டி நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நோணாங்குப்பத்தில் உள்ள படகுத்துறைக்கு வருமாறு ராஜ்குமார் அந்த சிறுமியை அழைத்துள்ளார். அங்கு வந்த அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த இளநீரை ராஜ்குமார் கொடுத்துள்ளார்.

மயக்க மருந்து கலந்த இளநீரைக் குடித்த சிறுமி மயக்கமடைந்தார். அப்போது ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளினர்.பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்து பார்த்த அந்த சிறுமி தனக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் சில நாள்கள் கழித்து சிறுமியை தொடர்பு கொண்ட ராஜ்குமார் நடந்ததைக் கூறியதுடன் மீண்டும் அந்த இடத்திற்கு வருமாறு கூறி மிரட்டியுள்ளார்.

இதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, வீட்டின் அருகே இருந்த டெய்லர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுமத்தில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழு விசாரணை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதும், கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், குழந்தைகள் நலக்குழுத் தலைவியின் பரிந்துரையின் பேரில் அரியாங்குப்பம் காவல்துறையினர், ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இது
குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :