வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2017 (13:00 IST)

மெரீனாவில் 15 நாட்களுக்கு 144 தடை

சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் ஒன்று கூடுவதாக கூறி அப்பகுதியில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் இளைஞர்கள் நடத்திய அறவழி போராட்டம் வெற்றிப்பெற்றாலும், கலவரமாக முடிந்தது. அரசு போராட்டக்காரர்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்த 7வது நாளான போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது.
 
இதன்மூலம் இனி யாரும் பெரும் அளவில் போராட்டம் நடத்த அச்சம் கொள்வார்கள் என்ற எண்ணத்துடனே காவல்துறையினர் கலவரத்துடன் போரட்டத்தை கலைத்தனர். இதையடுத்து நேற்று மீண்டும் போராட்டம் நடக்க போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
உடனே நேற்று பிற்பகல் முதல் காவல்துறையினர் மேரீனாவில் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். தற்போது மெரீனாவில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். இந்த உத்தரவு நேற்று இரவு பிரப்பிக்கப்பட்டது.
 
இதுகுறித்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் சங்கர் கூறியதாவது:-
 
மெரீனாவில் இளைஞர்கள் நாளை மீண்டும் கூட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் மெரீனாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
 
மெரீனாவில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பொழுது போக்கு, சுற்றுலாவுக்காக வருவோருக்கு தடை இல்லை. ஆனால் போராட்டம், பேரணி, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று(28.01.2017) நள்ளிரவு முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும், என்றார்.