1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (16:36 IST)

ஊட்டியில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரையரங்கம் மீண்டும் திறப்பு

ஊட்டியில் 130 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான திரையரங்கம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 


 
 
ஊட்டியில் கடந்த 1876ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆளுனராக இருந்த வெலிங்டன் என்பவர் அசம்பிலி ரூம்ஸ் என்ற பெயரில் ஒரு கட்டிடத்தை நாடக நடிகர்களுக்காக கட்டினார். அதில் பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 
 
பின்னர் 1886 ஆம் ஆண்டு திரையரங்கமாக மாற்றப்பட்டது. அந்த நாளில் இருந்து இந்த திரையரங்கம் ஊட்டி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

நூறாண்டுகளைக் கடந்து பல்வேறு சிறந்த படங்கள் திரையடப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இந்த திரையரங்கம் சீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் மூடப்பட்டது. 
 
சுமார் 70 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மீண்டும் திரையரங்கை திறந்து வைத்து முதல் காட்சியை தொடங்கி வைத்தார்.
 
130 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திரையரங்கில் ஆங்கிலம், இந்தி, மற்றும் தமிழ் ஆகிய 3 மொழிகளை சார்ந்த சிறந்த படங்களை மட்டும் தேர்வு செய்து திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.