Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வேறு இடத்திற்கு மாற்றம்?

வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (22:38 IST)

Widgets Magazine

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது ஓ. பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


 

இந்நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு பிரிவினர் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் அருகேயுள்ள கூவத்தூரின் கோல்டன் பே ரெஸார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மற்றவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களுடன், அவர்களது உறவினர்களிடம் கூட தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்த இடம் பலருக்கும் தெரிந்துவிட்டதால் வேறு ரகசிய இடத்தில் தங்க வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, பழையபடி சொகுசு பேருந்தில் அழைத்துச்சென்றாலும் தெரிந்துவிடும் என்பதால், தனித்தனி காரில் எம்.எல்.ஏக்களை அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை

தமிழகம் வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் ...

news

ஆட்சியை கலைக்க விரும்பும் ஸ்டாலின்? அதிமுக மீது அதிருப்தி

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக எந்த பணிகளும் நடைப்பெறவில்லை, அரசு முற்றிலும் ...

news

சசிகலா பற்றி பேசினால் என் தரம் குறைந்துவிடும்: மு.க.ஸ்டாலின்

சசிகலாவை பற்றி பேசி என் நேரத்தை விணாக்க விரும்பவில்லை, என் தரத்தை குறைத்துக் கொள்ள ...

news

அரசியல் அமைப்பு 356 ; தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் முடிவில் பாஜக?

தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி, தமிழகத்தில் அரசியமைப்பு பிரிவு 356ஐ ...

Widgets Magazine Widgets Magazine