வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 31 மார்ச் 2014 (19:53 IST)

11 ஆண்டுகள் டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளி கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் 7-வது தெருவில் வசித்து வந்த செல்வராஜ் என்பவர் அதே ஊரைச்சேர்ந்த புனிதவதி என்பவரின் வீட்டில் ஜரிகையை திருடி விற்றாராம். இதனால் புனிதவதி, பூபாலன், விஜயகுமார், சங்கர் மற்றும் சுந்தரம் என்கிற சுந்தரவடிவேலு ஆகியோர் செல்வராஜை கொலை செய்ததாக அப்போது ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளராக இருந்த சிங்காரவேல் வழக்கு பதிந்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தார்.

இவ்வழக்கில் இவர்கள் தான் குற்றவாளிகள் எந்த தகுந்த சாட்சியங்களுடன் நிருபிக்கப்படாததால் கடந்த 2006-ஆம் ஆண்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சுந்தரத்தை தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டார்.
 
சுந்தரம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால் அவரை கைது செய்ய 2002-ல் சுந்தரத்திற்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தணிப்படை காவல்துறையினர் திருப்பூரில் தலைமறைவாக இருந்த நமச்சிவாயம் மகன் சுந்தரம் என்கிற சுந்தரவடிவேலுவை(53) கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பாலகிருஷ்ணன்  15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.