1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (09:47 IST)

10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஈவ்-டீசிங் காரணமா? காவல்துறையினர் விசாரணை

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் பகுதியில் வசித்துவந்த 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் ரவி. அரசு வங்கி ஊழியரான இவரது மனைவி ஜெயா. இவர்களது மகள் கீர்த்திகா. 15 வயதுடைய இவர் அங்குள்ள விவேகானந்தா மெட்ரிக் குலேஷன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்நிலையில், வயிற்றுவலி ஏற்பட்டதால் கீர்த்திகா பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டில் இருந்தார் வீட்டில் கீர்த்திகா மிகவும் சோகமாக இருந்துள்ளார்.
 
வயிற்று வலி காரணமாக அவர் சோகமாக இருப்பதாக மாணவியின் தாய் நினைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் ஜெயா மார்க்கெட்டுக்குச் சென்றார். அப்போது வேலை முடிந்து 
வீடு திரும்பிய ரவி, வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தார்.
 
வீட்டில் கீர்த்திகா தூக்கில் தொங்கிதக் கொண்டிருந்தார். இதற்கிடையில் ஜெயாவும் வீடு திரும்பினார். மகள் தூக்கில் தொங்கியதை பார்த்த ஜெயா கதறி அழுதார். இதனால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கயிற்றில் இருந்து கீர்த்தனாவை கீழே இறக்கினர்.
 
இது குறித்து கொடுங்கையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வகுப்பில் ஏதாவது தகராறு ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
 
காவல்துறையிர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பள்ளியில் அவருடைன் படிக்கும் 4 மாணவர்களும் ஒரு மாணவியும் கீர்த்திகாவை கடந்த வியாழக்கிழமை கிண்டல் செய்தது தெரியவந்துள்ளது.
 
இது குறித்து கீர்த்தனா தனது தாயிடம்  கூறியுள்ளார். அவரை ஜெயா சமாதானப்படுத்தியுள்ளார். மேலும், இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கூறி விசாரித்து கண்டிக்கச் சொல்லாம் என்று கூறியுள்ளார். 
 
இந்நிலையில், மாணவியின் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின்  தற்கொலைக்கு காரணமான மாணவ - மாணவிகள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தகவலை அறிந்து அங்கு காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
 
மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.