Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜாமின் வேண்டும் என்றால் 100 சீமைக் கருவேல மரங்கள் இலக்கு: நீதிபதி அதிரடி உத்தரவு!!


Sugapriya Prakash| Last Modified புதன், 15 மார்ச் 2017 (14:45 IST)
ஜாமீனில் வருபவர்கள் 100 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அரியலூர் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 
 
சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறுஞ்சி தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்துவதால், அதை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இந்நிலையில், அரியலூர் மாவட்ட நீதிபதியான ரகுமான் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும் போது, அதற்கான நிபந்தனை படிவத்தில் 100 கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 
ஜாமீனில் வெளி வருபவர்கள் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்கள் வெட்டி அகற்றி, அதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :