வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 2 மே 2015 (20:34 IST)

காட்பாடி அருகே இளம்பெண்ணை கடத்தி 10 பேர் கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம்

காதலனுடன் சென்ற திருமணமான இளம்பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்.
 
ஆற்காட்டை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 18 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் குழந்தை உள்ளது.
 
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஜெயந்திக்கு வேறொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. திருமணம் செய்யாமல் கள்ளக்காதலனுடன் வசித்து வந்தார்.
 
இதற்கிடையில் கோவிலுக்கு சென்று வரும் வழியில் வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலனுக்கு தெரியாமல் ஜெயந்தி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த விவகாரம் கள்ளக்காதலனுக்கு தெரியவர அவரும் ஜெயந்தியை பிரிந்து சென்றார். புதிய காதலனோடு கைகோர்த்த ஜெயந்தி பல இடங்களுக்கு சென்று கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
 
ஜெயந்தியின் நடவடிக்கையை அறிந்த புதிய காதலன் தனது நண்பர்களின் காம இச்சைக்கு ஜெயந்தியை இரையாக்க எண்ணினர். அதற்காக ஜெயந்தியை நைசாக பேசி காட்பாடி அடுத்த வள்ளிமலைக்கு காதலன் அழைத்து வந்தான்.
 
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று தனிமையில் இருக்கலாம் என கூறினான். ஜெயந்தியும் அவனது ஆசைக்கு சம்மதித்தார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்ற போது அங்கு மறைந்திருந்த 10 பேர் கும்பல் ஜெயந்தியை சுற்றி வளைத்தது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி கத்தி கூச்சலிட்டார். வாயை பொத்திய கும்பல் மாறி மாறி ஜெயந்தியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 
இதையடுத்து ஜெயந்தியை அங்கேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. படுகாயமடைந்த ஜெயந்தியின் அலறல் சத்தம்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஜெயந்திக்கு நேர்ந்த கொடுமையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயந்தியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரண நடத்தினர். தப்பியோடிய 10 பேர் கும்பலை உடனடியாக பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.