பிரபல நடிகையின் தோட்டத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்ட ஆடுகள்


sivalingam| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (05:45 IST)
ரஜினி, கமல் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் இருந்த காவலாளி அங்கு மேய்ந்த ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம் என்ற கிராமத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ரவி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த தோட்டத்தில் வாழை உள்பட பல பயிர்கள் வளர்ந்து வந்தன.

இந்த நிலையில் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த தோட்டத்தில் திடீர் திடீரென ஆடுகள் உள்ளே புகுந்து பயிர்களை நாசமாக்குவதை கண்டு ஆத்திரம் அடைந்த காவலாளி ரவி, அங்கு மேய்ந்த ஆடுகளுக்கு விஷம் வைத்ததாக தெரிகிறது. இந்த விஷத்தை  தின்ற 10க்கும் மேற்பட்ட ஆடுகள் நேற்று பரிதாபமாக பலியானது.

இதுகுறித்து ஆடுகளுக்கு சொந்தக்காரர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவலாளி ரவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :