Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 1½ கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை

theft
Last Updated: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (10:14 IST)
சென்னை அண்ணா நகரில் தொழிலதிபர் ஒருவரது வீட்டில் 1½ கிலோ தங்கம், 70 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, யாருமில்லா வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்களின் தொல்லைகள் அதிகமாகி வருகிறது.
 
இந்நிலையில் சென்னை அண்ணா நகர் பி.பிளாக் 9-வது தெருவை சேர்ந்தவர் சுதர்சன்ராவ் என்ற தொழிலதிபர், பெங்களூருவிற்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்ட திருடர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 1½ கிலோ தங்கம், 70 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 3 லட்சம் ரூபாய்  ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
door
இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய சுதர்சன்ராவ், பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :