புது‌க்கோ‌ட்டை‌யி‌ல் நா‌ம் த‌மிழ‌ர் இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் படுகொலை

செ‌ன்னை | Webdunia| Last Modified புதன், 16 பிப்ரவரி 2011 (10:57 IST)
புது‌க்கோ‌ட்டை‌யி‌‌ல் நா‌ம் த‌மிழ‌ர் இய‌க்க‌த்‌தி‌ன் மா‌நில ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் ‌மு‌த்து‌க்குமா‌‌ர் ம‌ர்ம ந‌ப‌ர்களா‌ல் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

மதுரையை சே‌ர்‌ந்தவ‌ர் மு‌த்து‌க்குமா‌ர். உற‌வின‌ர் ‌வீ‌ட்டி‌ற்காக புது‌க்கோ‌ட்டை வ‌ந்த அவ‌ர் தமது ந‌ண்ப‌ர் வழ‌க்க‌றிஞ‌ர் போ‌த்த‌ப்பனுட‌ன் அ‌ண்ணா ‌சிலை கடை‌த் தெரு‌வி‌ல் நே‌ற்‌றிரவு பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்த‌ா‌ர்.

அ‌ப்போது அ‌ங்கு வ‌‌ந்த ம‌ர்ம நப‌ர்‌க‌ள் மு‌த்து‌க்குமாரை சரமா‌ரியாக வெ‌ட்டி உ‌ள்ளன‌ர். இ‌தி‌ல் மு‌த்து‌க்குமா‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌‌திலேயே ப‌‌லியானா‌ர்.
பல‌‌த்த காய‌ம் அடை‌ந்த போ‌த்த‌ப்ப‌ன் புது‌க்கோ‌ட்டை அரசு மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளனா‌ர்.

இது கு‌‌றி‌‌‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை ம‌ே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :