பாதிரியார் கற்பழித்த விவகாரம்: 5 மாத சிசுவின் கரு தோண்டி எடுக்கப்படுகிறது!

Webdunia| Last Modified வியாழன், 19 டிசம்பர் 2013 (12:13 IST)
FILE
நெல்லை பேட்டையை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி அடிக்கடி அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று வருவார். மேலும் ஆலயத்தில் உள்ள ‘கொயர்’ பிரிவில் சேர்ந்து பாடல் படித்து வந்தார்.

அப்போது அந்த ஆலயத்தில் பாதிரியாராக வேலை பார்த்த செல்வன் மாணவிக்கு பாடல்கள் சொல்லி கொடுப்பது போல் தனியாக அழைத்து தனது காமப்பசியை தீர்த்துக்கொண்டார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். அவளது வயிறு பெரிதானதால், வீட்டில் சந்தேகப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தான், மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் விபரத்தை பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினார்கள்.
ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர், என்ன செய்வது என்று தெரியாமல், தங்கள் மகளை கற்பழித்த, அந்த காமூக பாதிரியார் செல்வனிடமே சென்று நியாயம் கேட்டனர்.

உடனடியாக பாதிரியார் செல்வன், தனது பண பலத்தின் மூலம், மாணவிக்கு கருக்கலைப்பு செய்து, பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி மாணவி மேரியை நெல்லை டவுணில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று 5 மாதம் வளர்ந்த சிசுவை கருக்கலைப்பு செய்து அகற்றினார். பின்னர் அந்த கருவை, பாதிரியார் பணி செய்த ஆலயத்துக்கு சொந்தமான மயானத்தில் புதைத்து விட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :