பள்ளி மாணவியை மயக்கி கற்பழித்த ஆசிரியர் கைது

FILE

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்பையாபுரம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9, 10-ம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல் ஆசிரியராக அருண்குமார் (27) என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுப்பற்றி தலைமை ஆசிரியர் அனுஷியாவிடம் மாணவிகள் புகார் செய்தனர். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. அவர் ஆசிரியர் அருண்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விபரங்களை தெரிவித்தார். இதையடுத்து மாணவி மற்றும் அவரது பெற்றோர் நாமக்கல் குழந்தைகள் நல குழுமத்தில் சம்பந்தப்பட்ட சமூக அறிவியல் ஆசிரியர் அருண்குமார் மீது புகார் செய்தனர்.

இதைதொடர்ந்து குழுவின் தலைவர் சிவகாமவல்லி என்பவர் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை அனுஷியா மற்றும் தமிழ் ஆசிரியை ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவி வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் செய்தார். அதில் நாமக்கல் பொறியியல் கல்லூரியில் நடந்த கண்காட்சிக்கு தன்னை அழைத்து சென்று ஆசிரியர் அருண்குமார் அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.

Webdunia|
ராசிபுரம் அருகே உள்ள பள்ளியில் படித்த 9 ஆம் வகுப்பு மாணவியை மயக்கி கற்பழித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆய்வாளர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அருண்குமாரை கைது செய்தார். பின்னர் அவரை ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்த கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :