பள்ளி மாணவிக்கு செக்ஸ் தொல்லை; கொத்தனார் கைது

Webdunia|
FILE
திருவள்ளூர் அருகே 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் ெய்ய முயன்ற கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே காரணி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி டிரைவர். இவரது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 1 ஆம் தேதி முனுசாமியின் மனைவி பூ பறிக்கும் வேலைக்கு சென்று விட்டார். முனுசாமி காலை 7.30 மணிக்கு வேலைக்கு செல்லும்போது தனது மகளை பள்ளிக் கூடத்தில் விட்டு சென்றார்.
சிறுமி சக மாணவிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அன்பரசு என்ற கொத்தனார் சிறுமியிடம் பேசினார். பின்னர் அவர் சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் சிறுமி சத்தம் போட்டார். அவரது அலறல் கேட்டு சக மாணவிகள் ஓடி வந்தனர். இதனால் அன்பரசு ஓடி விட்டார்.
இதுகுறித்து முனுசாமி வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் விஜயபாரதி வழக்குப்பதிவு செய்து அன்பரசை கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :