டி.வி பார்க்கச் சென்ற 10 வயது சிறுமி பலாத்காரம்

Webdunia|
FILE
காங்கேயம் பகுதியில் டி.வி பார்ப்பதற்காக பக்கத்து வீட்டிற்கு சென்ற 10 வயது சிறுமியை, அந்த வீட்டின் வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
காங்கேயம் பகுதியை சேர்ந்த 10 வயதான சிறுமி பக்கத்து வீட்டுக்கு டி.வி.பார்க்க சென்றாள். அப்போது அங்கிருந்த ஜெகதீஸ் என்ற வாலிபர் சிறுமியின் ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த வாலிபரின் செயலால் பயந்து போன சிறுமி அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த வாலிபரை அதே வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
காங்கேயம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் ஜெகதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :