கூட்டணியில் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை - கருணாநிதி

Webdunia|
செய்தியாளர் :- பா.ஜ.க. தலைவராக மோடி அவர்களை முன்னிறுத்தி அவர் தான் பிரதமர் என்று கூறிப் பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தான் பிரதமர் என்று பிரச்சாரம் செய்து. திராவிட முன்னேற்றக் கழகம் பிரதமராக யாரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும்?

கருணாநிதி :- இவர்கள் அல்லாத ஒருவரை!

செய்தியாளர் :- தி.மு.க. வேட்பாளர் ஒருவரை எதிர்த்து தஞ்சையில், புதுக்கோட்டையில் கொடும்பாவி எரித்ததைப் பற்றி?

கருணாநிதி :- அதைப் பற்றி எனக்குத் தெரியாது.

செய்தியாளர் :- தமிழகத்தில் இந்த முறை பல முனை போட்டி நடைபெறவிருக்கிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி :- மக்களுக்கு நல்லது தான்!

செய்தியாளர் :- காங்கிரஸ் கட்சி உங்கள் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்களே?

கருணாநிதி :- இவைகள் எல்லாம் உங்களுடைய யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி. ஆனால் நீங்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை இந்த அளவுக்கு குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
செய்தியாளர் :- உங்கள் தேர்தல் அறிக்கையில் 100 தலைப்புகளில் மிக விரிவாக அனைத்துத் தரப்பினரின் பிரச்சினையையும் உள்ளடக்கி வெளியிட்டிருக்கிறீர்களே?

கருணாநிதி :- நன்றி.

செய்தியாளர் :- இளைஞர்களுக்கு 30 சதவிகிதம் வாய்ப்பு அளிக்கப் படும் என்று முன்பு சொல்லியிருந்தீர்கள். ஆனால் 30 சதவிகிதம் தரப்பட வில்லை என்று சொல்கிறார்களே?
கருணாநிதி :- இப்போது 30 சதவிகிதத்திற்கு மேலாகவே இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

செய்தியாளர் :- உங்கள் கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

கருணாநிதி :- எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வேறு யாரையும் எதிர் பார்க்கவில்லை. எனவே எந்தக் கட்சியினர் வருவார்கள் என்று காத்திருக்கவில்லை.
செய்தியாளர் :- இந்தத் தேர்தலில் எந்த ஒரு தேசியக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகிறீர்கள். இது உங்களுக்கு “பின்னடைவு” இல்லையா?

கருணாநிதி :- எந்தப் பின்னடைவும் எங்களுக்கு ஏற்படாது என்று கருணாநிதி தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :