ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு 25ஆ‌ம் தே‌தி கல‌ந்தா‌ய்வு

சென்னை | Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:18 IST)
ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு வரு‌ம் 25, 26 ஆ‌கிய தே‌திக‌‌ளி‌ல் கல‌ந்தா‌ய்வு நடைபெறு‌கிறது எ‌‌ன்று ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் அலுவலக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் அலுவலக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திக் குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேனிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பொது மாறுதலும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல்களும் கல‌ந்தா‌ய்வு முறையில் நடக்கிறது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வரு‌ம் 25, 26 ஆ‌கிய தேதிகளில் கல‌ந்தா‌ய்வு நடக்கிறது.

25ஆம் தேதி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்ட மாறுதல்கள் நடக்கிறது. 26ஆம் தேதி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் நடக்கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :