Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேர‌றிவாள‌ன், முருக‌ன், சா‌ந்தனை கா‌க்க உ‌யிரை ‌தியாக‌ம் செ‌ய்த இளம்பெண் செ‌ங்கொடி

Widgets Magazine

FILE
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆ‌கியோ‌ரி‌ன் உயிரை காப்பாற்ற கோரி காஞ்‌சிபுரத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு‌ள்ள ‌நிக‌ழ்வு த‌மிழக‌த்‌தி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்வுகளை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை வரு‌ம் 9‌ஆம் தேதி தூக்கில் போட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை காப்பாற்றக்கோரியும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து 3 பேரையும் காப்பாற்றக்கோரி காஞ்‌சிபுரத்தில் இளம் பெண் ஒருவர் தீக்குளித்து த‌ன் உ‌யிரை மா‌ய்‌‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ள ‌நிக‌ழ்வு த‌‌மிழக‌த்‌தி‌ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்‌சிபுரம் தாலுகா அலுவலக வளாகம் அருகே நேற்று மாலை 5.45 மணி அளவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் குளிர்பான பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை உடலின் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

தாலுகா அலுவலக வளாக வாசல் அருகே திடீரென்று பெண் ஒருவர் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் அக்கம்பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து தீயை அணைத்தனர். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சு வந்ததும் அந்த பெண்ணை அதில் ஏற்றி காஞ்‌சிபுரம் அரசு மரு‌த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் காவ‌ல்துறை‌யின‌ர் ‌நிக‌ழ்‌விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தின‌ர். விசாரணையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் செங்கொடி (19) என்றும், அவர் காஞ்‌சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த பரசுராமனின் மகள் என்றும் தெரியவந்தது.

செங்கொடி காஞ்‌சிபுரம் மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து பல்வேறு பொது சேவைகளிலும், தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட செங்கொடி உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்ததை காவ‌ல்துறை‌யின‌ர் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். இப்படிக்கு தோழர் செங்கொடி' என்று எழுதப்பட்டு இருந்தது.

காஞ்‌சிபுரத்தில் இளம்பெண் திடீரென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‌நிக‌ழ்வு த‌மிழக‌ம் முழுவது‌ம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மக்கள் மன்றத்தை சேர்ந்த மகேஷ் கூறுகையில், எங்களுடைய அமைப்பில் சிறு வயது முதலே செங்கொடி இணைந்து செயல்பட்டு வந்தார். ஈழத்தமிழர் போராட்டம், காஞ்சி மக்கள் போராட்டம் என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டு உள்ளார். நல்ல படிப்பறிவு பெற்ற அவர் மக்களுக்காக போராடி வந்தார். இந்நிலையில் அவர் தீக்குளித்து செத்த சம்பவம் எங்களை பெருத்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் : பேச்சுவார்த்தையில் மேலும் முன்னேற்றம்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தத்தை உருவாக்க இந்திய, ...

ரூபாயின் பணவீக்கம் 5.22 விழுக்காடாக குறைந்தது!

உணவுப் பொருட்கள், ஜவுளி ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் வாங்கும் சக்தி மே 12 ஆம் ...

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : மராட்டியத்தில் ஒருவர் கைது!

ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் உள்ள பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு ...

2010ல் அகண்ட வரிசை பயன்படுத்துவோர் 2 கோடியாக உயரும்!

நமது நாட்டில் அகண்ட அலைவரிசையை பயன்படுத்தி இணையத்தை இயக்குவோர் எண்ணிக்கை 2010 ஆம் ...

Widgets Magazine Widgets Magazine