வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடிக்கும் பெண் - வைரல் வீடியோ


Murugan| Last Modified சனி, 10 ஜூன் 2017 (14:15 IST)
தனது வீட்டிற்குள் நுழைந்த ஒரு பாம்பை ஒரு பெண், பயப்படாமல் பிடித்து அதை தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். 

 

 
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசிப்பவர் சன்ஷைன் மெக்கரி. சமீபத்தில் இவரது வீட்டிற்குள் ஒரு பாம்பு புகுந்து விட்டது. அந்த பாம்பை, தலையனை உறை மூலம் லாவகாமாக பிடித்து, வீட்டிற்கு வெளியே கொண்டு சென்று விட்டிருக்கிறார்.
 
மேலும், அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டார். கொஞ்சமும் பயப்படாமல் அவர் அந்த பாம்பை பிடிப்பதை பலரும் பாராட்டியுள்ளனர். இதுவரை 30 லட்சத்திற்கும் மேலானோர் அந்த வீடியோ பார்த்துள்ளனர். அதேபோல், 37 ஆயிரம் பேர் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு ஷேர் செய்துள்ளனர்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :