வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (14:48 IST)

கவிஞனின் பணி கவிதை எழுதுவது மட்டுமல்ல

வியட்நாம் நாட்டுப் போராளியும் அந்நாட்டின் அதிபராக இருந்தவருமான ஹோ-சி-மின் எழுதிய உலகப் புகழ் பெற்ற கவிதை.
 
முன்பெல்லாம் கவிஞர்கள்
பனித்துளியின் அழகு
மென்மையான பூக்கள்
ஜொலிக்கும் வெண்ணிலா
ஓடிவரும் தென்றல்
பாய்ந்து வரும் ஆறுகள்
கொட்டும் மழைத்துளிகள்
பசுமை எழில் கொஞ்சும் மலைகள்
என இயற்கையின் அழகைப் புகழ்ந்து பாடினர்
ஆனால் இன்று,
எஃகு இரும்பு பேன்ற உறுதிமிக்க போராட்ட வாழ்க்கையே
நமது கவிதைகளின் கருப்பொருள்

இன்று, கவிஞர்களின் பணி
கவிதை எழுதுவது மட்டுமல்ல
போராட்டத்தை
தலைமை ஏற்று நடத்தவும் வேண்டும்.
 
ஹோ-சி-மின்
தமிழில்: சுரேஷ் வெங்கடாசலம்

வியட்நாம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மக்களின் ஷோசலிசப் புரட்சியை தலைமை ஏற்று நடத்தியவர் ஹோ-சி-மின். சோஷலிச வியட்நாமின் அதிபராக இருந்தவர்.

வியட்நாமின் விடுதலைக்கு மட்டுமல்லாது, அடிமைத் தனத்திலிருந்து மீள முனைபவர்களுக்கு அவரது கருத்துகள் எப்போதும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன.