வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2015 (17:09 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.

திடீர் பணவரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
 
அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மாதத்தின் மையப்பகுதியில் சேமிப்புகள் கரையும், தந்தைக்கு மூச்சுத் திணறல், வாகனப் பழுது, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையுடனான கருத்து மோதல்கள் விலகும்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 3, 6, 12  
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பிஸ்தா பச்சை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி