வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2015 (16:46 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு உண்டு. வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். வீட்டு விசேஷங்கள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் பணம் வரும்.
 
உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். தாய்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிற்பகுதியில் வீண் செலவு, அலைச்சல், டென்ஷன், நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன், அடி வயிற்றில் வலி வந்துப் போகும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பழைய கடன் குறித்து கவலைகள் வந்துப் செல்லும்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் புது திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்-. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துங்கள். உத்யோகத்தில் உங்களின் அதிரடியான செயல்களை கண்டு அனைவரும் வியப்பார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். விவேகமான முடிவுகளெடுக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 2, 11, 15, 16, 20
அதிஷ்ட எண்கள்: 6, 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, நீலம்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்