வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. அசைவம்
Written By Webdunia

மீன் கோலா உருண்டை

FILE
மீன், பெரும்பாலான அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தனமான ஒன்று. விடுமுறை காலத்தில் வீட்டில் அனைவரும் இருக்கும்போது, மீனை வைத்து ஓரே மாதிரியான குழம்பு, வறுவல் போன்றவற்றை செய்து போரடிக்காமல், இந்த புது வகை ஸ்நாக்சை செய்து அசத்துங்கள்.

தேவையானவை

மீன் துண்டுகள் - 4
பிரெட் துண்டுகள் - 5
வெங்காயம் - 1
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - சிறிது
சீரகம் - 1 ஸ்பூன்
முட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

FILE
செய்முறை

மீன் துண்டுகளை நன்றாக மஞ்சள் தூளில் போட்டு சுத்தம் செய்த பிறகு, அதனை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி, பிரெட்டின் வெள்ளை பகுதியை தண்ணீரில் நினைக்கவும். தண்ணீரில் இருந்து பிரெட்டுகளை எடுத்து, உள்ளங்கையில் வைத்து அழுத்தி நீரை வெளியேற்றவும்.

ஒரு பாத்திரத்தில், அரைத்து வைத்த மீன் விழுது, பிரட் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள்,இஞ்சி பூண்டு விழுது, சீரகம், முட்டை, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.

இந்த கலவையை சரியான பதத்திற்கு பிசைந்த பின், இதிலிருந்து சிறிய உருண்டைகள் செய்து அதை எண்ணெய்யில் பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.