வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Caston
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (13:55 IST)

சுவையான உருளைக்கிழங்கு மீன் குழம்பு

மீன் குழம்பு என்றால் அதற்கு அடிமையாகும் பலர் உண்டு. உருழைக்கிழங்கு சேர்த்து மீன் குழம்பு தயார் செய்து பாருங்கள் அவ்வளவுதான் அதன் ருசி பலமடங்காகி மீன் குழம்பு பிரியர்கள் உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள். உங்களுக்கு பாராட்டுகள் குவியும்.



தேவையான பொருட்கள்

* மீன் – 1 கிலோ
* உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
* சின்ன வெங்காயம் –  200  கிராம்
* பூண்டு – 10 பல்
* தக்காளி –  4
* பச்சைமிளகாய் – 8
* மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
* மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
* மல்லித்தூள் – 4 ஸ்பூன்
* புளி – எலுமிச்சை அளவு
* வெந்தயம் – 1/2 ஸ்பூன்
* சீரகம் – 1/2 ஸ்பூன்
* சோம்பு – 1/2 ஸ்பூன்
* எண்ணெய் – தேவையான அளவு
* உப்பு – தேவையான அளவு
* கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிது

செய்முறை

* முதலில் மீனை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள் தடவி வைக்கவும்.

* உருளைக்கிழங்கை தோலுரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* வெந்தயம், சீரகம், சோம்பு முதலியவற்றை ஒரு வாணலியில் போட்டு தாளித்து பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

* இப்போது புளிக் கரைசலை ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

* உருளைக்கிழங்கு நன்கு வெந்தவுடன் மீனை போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

* இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு மீன் குழம்பு தயார்.