1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

நாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா?...

தேவையான பொருட்கள்: 
 
நாட்டுக் கோழி - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) 
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1/4 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
கிராம்பு - 2 
பட்டை - 2
ஏலக்காய் - 2 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 
செய்முறை: 
 
முதலில் நாட்டுக் கோழியை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி, குக்கரில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1  டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். 
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து,  சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து நன்கு  மென்மையாக வதக்க வேண்டும்.
 
பின்னர் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து மசாலா நன்கு கோழியுடன் ஒன்று சேருமாறு  கலறி விட வேண்டும். ஒருவேளை அடிப்பிடிப்பது போல் இருந்தால், அதோடு சிறிது சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி, நன்கு  பிரட்டி, கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், சிவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்.