மீன் சூப்

Webdunia|
தேவையானவை:

ஸ்லைஸ் மீன் - 4 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
மக்காச்சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பட்டை லவங்கம் - தலா 2

செய்முறை:
புளியை‌க் கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.

அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இந்தக் கலவையில் மீன் துண்டுகளைப் போட்டு ஊற வையுங்கள்.

ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு நீர் விட்டு வேக வையுங்கள்.
மீன் வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.

இந்த நீரில் பட்டை, லவங்கம் தாளித்துப் போட்டு கொதிக்க விட்டு இறக்குங்கள்.

மேலே பொரித்த மீனைப் போட்டு கொத்தமல்லித் தழை தூவுங்கள்.

சுடச்சுட மீன் சூப் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :